Skip to main content

Posts

யார் துன்மார்க்கன்?

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!! உங்கள் அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகுந்த சாத்தானின் பல விதமான சோதனைகளையும் தாண்டி இந்த வலைப் பதிவினை வெளியிட கர்த்தர் கொடுத்த மேலான தயவிற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். துதிகளுக்குப் பாத்திரராயிருப்பவர் அவர் ஒருவரே எனவே நம் துதி, கனம், மகிமை என அனைத்தையுமே அவருக்கே செலுத்த கடமைபட்டவர்களாக இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. யார் துன்மார்க்கன்?   தன்னைத்தான் பெருமைப் பாராட்டுதல் துன்மார்க்கனின் வேலை என தாவீது அவர்கள் சங்கீதம் 10: 4  - ல் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது. இது விவாதிக்கப்பட வேண்டிய மிகப் பெரிய தலைப்பாகவே உள்ளது. ஆம், அந்த வசனத்தின் துவக்கத்தில் அவர் துன்மார்க்கன் தான் இச்சித்தவைகள் கிடைத்தது எண்ணித் தன்னைத்தான்  பெருமைப் பாராட்டுவதாக தாவீது குறிப்பிடுகிறார். இதில் நாம் ஆழமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், முதலில் துன்மார்க்கனின் மனதின் நினைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான்.  கர்த்தரை அசட்டைப் பண்ணுதல்...
Recent posts

போக்குச்சொல்ல இடமில்லை - 2

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!! உங்கள் அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சாத்தானின் பிடியில் உலகம் சிக்கித் தவித்து வருவது சற்று மனதை பதை பதைக்க வைப்பதாகவே உள்ளது. எங்கு பார்த்தாலும் கலவரம், பிரச்சனைகள், வீண் சண்டைகள், போர் பதட்டங்கள் என கேள்வி படும் அனைத்துமே பேய் தனத்தை ஒத்து இருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. உலகத்தின் இந்நிலை மாற நாம் ஜெபிக்க அழைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.  பிறரைக் குற்றவாளயாகத் தீர்க்கிறவன் நிலை கடந்த பதிவின் தொடர்ச்சியாக போக்குச்சொல்ல இடமில்லாத மற்றுமொரு நிகழ்வினை காண்போம். ரோமர் 2-ம் அதிகாரம் முதல் வசனத்தில் "மற்றவர்களைக் குற்றவாளயாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை" என்று அப்போஸ்தலனாகிய பவுல் அவர்கள் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது. நாம் மற்றவர்களைத் தீர்க்கும் செயலானது கடவுளால் விரும்பப்படுவதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதையே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பல இடங்களில் குறிப்பிட்டு கூறுவ...

போக்குச்சொல்ல இடமில்லை

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,                    உங்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தினாலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுளின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் அனைவர் மேலும் விழுந்த மிகப்பெரிய கடமையாக உள்ளது. நாம் கடவுளின் வார்த்தைகளை தியானிக்கும் நேரங்களில் அவர் நமக்குள் ஆளுகை செய்து நம்மை நல் வழிகளில் நடத்தி பிறருக்கு முன் உதாரணமாக மாற்றி வாழ வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவபக்தியான மனிதன்                   இன்றைக்கு நாம் தியானிக்கப் போகும் வேதத்தின் பகுதி ரோமர் 1:19-20. இந்த வசனங்களை நாம் வாசிக்கும் போது அவபக்தியான மனிதர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பேசுவதை நாம் காண முடிகிறது. அவபக்திக்கும் அநியாயத்துக்கும் எதிரான தேவ கோபம் பற்றி கூறி விட்டு, தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது. உலக மக்கள் அனைவருக்குமே நல்லது எது தீயது எது என்...