கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!
உங்கள் அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சாத்தானின் பிடியில் உலகம் சிக்கித் தவித்து வருவது சற்று மனதை பதை பதைக்க வைப்பதாகவே உள்ளது. எங்கு பார்த்தாலும் கலவரம், பிரச்சனைகள், வீண் சண்டைகள், போர் பதட்டங்கள் என கேள்வி படும் அனைத்துமே பேய் தனத்தை ஒத்து இருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. உலகத்தின் இந்நிலை மாற நாம் ஜெபிக்க அழைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.
பிறரைக் குற்றவாளயாகத் தீர்க்கிறவன் நிலை
கடந்த பதிவின் தொடர்ச்சியாக போக்குச்சொல்ல இடமில்லாத மற்றுமொரு நிகழ்வினை காண்போம். ரோமர் 2-ம் அதிகாரம் முதல் வசனத்தில் "மற்றவர்களைக் குற்றவாளயாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை" என்று அப்போஸ்தலனாகிய பவுல் அவர்கள் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது. நாம் மற்றவர்களைத் தீர்க்கும் செயலானது கடவுளால் விரும்பப்படுவதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதையே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பல இடங்களில் குறிப்பிட்டு கூறுவதை நாம் காணலாம்.
பாவம் இல்லாதவன்??
உதாரணமாக, விபச்சாரத்தில் ஈடுபட்டவள் எனக் குற்றம் சாட்டடப்படட பெண்ணை மக்கள் கல்லெறிய முயன்ற போது அவர் கூறிய பதில் இதனை தெளிவாக எடுத்துக் கூறுவதை நாம் உணரலாம் ("உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் முதலில் கல்லெறியக்கடவன்"). நாம் யாருடைய நீதிபதிகளும் அல்ல. யாரையும் நியாயந்தீர்க்கவும் நமக்கு உரிமை இல்லை. அதை நம் கர்த்தர் விரும்புவதும் இல்லை.
பூரண சற்குணர்
அனைத்தையும் சாந்த மனதோடு எதிர் கொண்டு நாம் வாழ வேண்டும் என்றே நம் தேவன் விரும்புகிறார். நியாயந்தீர்க்கும் உரிமை தகுதி அவரிடம் மட்டுமே இருக்கிறது. ஏனெனில் அவரே பூரண சற்குணரானவர். நாளை சந்திப்போம்...
Comments
Post a Comment