கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!! உங்கள் அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகுந்த சாத்தானின் பல விதமான சோதனைகளையும் தாண்டி இந்த வலைப் பதிவினை வெளியிட கர்த்தர் கொடுத்த மேலான தயவிற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். துதிகளுக்குப் பாத்திரராயிருப்பவர் அவர் ஒருவரே எனவே நம் துதி, கனம், மகிமை என அனைத்தையுமே அவருக்கே செலுத்த கடமைபட்டவர்களாக இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. யார் துன்மார்க்கன்? தன்னைத்தான் பெருமைப் பாராட்டுதல் துன்மார்க்கனின் வேலை என தாவீது அவர்கள் சங்கீதம் 10: 4 - ல் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது. இது விவாதிக்கப்பட வேண்டிய மிகப் பெரிய தலைப்பாகவே உள்ளது. ஆம், அந்த வசனத்தின் துவக்கத்தில் அவர் துன்மார்க்கன் தான் இச்சித்தவைகள் கிடைத்தது எண்ணித் தன்னைத்தான் பெருமைப் பாராட்டுவதாக தாவீது குறிப்பிடுகிறார். இதில் நாம் ஆழமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், முதலில் துன்மார்க்கனின் மனதின் நினைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான். கர்த்தரை அசட்டைப் பண்ணுதல்...